குஜராத்: சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ். ஆதரவு கருத்துகளை பரப்பியவர் கைது

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஐ.எஸ். அமைப்பின் கருத்துகள், வீடியோ பதிவுகள், புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது கண்டறியப்பட்டது.
குஜராத்: சமூக வலைத்தளங்கள் மூலம் ஐ.எஸ். ஆதரவு கருத்துகளை பரப்பியவர் கைது
Published on

காந்திநகர்,

குஜராத்தின் கட்ச் மாவட்டத்துக்கு உட்பட்ட பூஜ் பகுதியை சேர்ந்தவர் பகிர்மமாட் கட்கா (வயது 32). இவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி வந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

குறிப்பாக ஐ.எஸ். அமைப்பின் கருத்துகள், வீடியோ பதிவுகள், புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்காவை கைது செய்தனர்.

பின்னர் அவரது செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது. சமூக வலைத்தளங்களில் ஏராளமான போலி கணக்குகளை தொடங்கி அவற்றின் மூலம் இந்த பதிவுகளை வெளியிட்டது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com