உத்தரகாண்டின் கவர்னராக குர்மீத் சிங் நியமனம்

உத்தரகாண்டின் கவர்னராக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரகாண்டின் கவர்னராக குர்மீத் சிங் நியமனம்
Published on

புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ள உத்தரவில், உத்தரகாண்டின் கவர்னராக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அசாம் கவர்னராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகலாந்து கவர்னர் பொறுப்பினை ஏற்க இருக்கிறார். நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com