மொபைல் போனை பறித்த கணவன் அந்தரங்கப் பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி...!

மனைவியிடமிருந்து மொபைல் போனை பறித்த கணவன், தூங்கிக் கொண்டிருந்த கணவனின் அந்தரங்கப் பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி.
மொபைல் போனை பறித்த கணவன் அந்தரங்கப் பகுதியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி...!
Published on

குவாலியர்

மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார் வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி பாவனா. .

சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த சுனிலிடம் பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் நீங்கள் சென்ற பிறகு உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் பேசுகிறார் என்று புகார் அளித்தார்.

இதுபற்றி சுனில் மனைவியிடம் விசாரித்த போது, நான் பேசவில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில், சுனில் வீட்டிற்கு வந்தபோது, பாவனா அந்த இளைஞனிடம் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மனைவியிடம் பேசக்கூடாது என எச்சரித்தார் ஆனால் பாவனா கேட்கவில்லை. இதனால் மிகவும் வெறுப்படைந்த சுனில் பாவனாவின் மொபைல் போனை எடுத்து வைத்துக்கொண்டார்.

இதையடுத்து இரவு 2 மணியளவில் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து உள்ளார். இதை எதிர்பார்த்து காத்திருந்த பாவனா எழுந்து கிச்சனில் சமையல் எண்ணெயை சூடாக்கினார். பின்னர் சூடான எண்ணெயைக் கொண்டு வந்து கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துள்ளது. இதையடுத்து மனைவி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

வலியால் துடித்த சுனிலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவரின் வாக்குமூலத்தின் பேரில் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மனைவி பாவனவை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com