இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி


இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Aug 2024 4:24 PM IST (Updated: 19 Aug 2024 5:38 PM IST)
t-max-icont-min-icon

ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர்.

புதுடெல்லி,

இந்த ஆண்டு, ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துகிறார்கள். பதிலுக்கு சகோதரர்களும், தனது சகோதரி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உறுதியளித்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். உடன் பிறந்த சகோதரர்களுக்கு மட்டுமின்றி தங்கள் நலனில் அக்கறை காட்டும் உறவுகள், அன்போடு பழகும் நபர்கள் மற்றும் நண்பர்களுக்கும் பெண்கள் ராக்கி கயிறு கட்டி மகிழ்வார்கள்.

இந்த நிலையில், ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி டெல்லியில் பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி மகிழ்ந்தனர். பள்ளி மாணவிகள் ராக்கி கட்டும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, "தனது இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடியதில் மகிழ்ச்சி" என அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story