உக்ரைனின் ’சுமி’ நகரில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களும் வெளியேற்றம்: வெளியுறவுத்துறை

உக்ரைனின் ‘சுமி’ நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுவிட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Photo Credit: twitter/ @MEAIndia
Photo Credit: twitter/ @MEAIndia
Published on

புதுடெல்லி,

ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனின் சுமி நகரில் இருந்து அனைத்து இந்தியர்களும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு விட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

சுமி நகரில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் மீட்டு விட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மீட்கப்பட்ட மாணவர்கள் போல்டவா நகருக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அங்கிருந்து மேற்கு உக்ரைனுக்கு ரெயில் மூலம் வருவார்கள் எனப்பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி, சுமி நகரில் இருந்து இந்திய மாணவர்களை மீட்கும் பணி தொடர்பாக ரஷிய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com