விமான நிலையத்தில் சரிந்த இருதய நோயாளி; உடனடியாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய சி.ஐ.எஸ்.எப். அதிகாரி

டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகை கடந்த மார்ச் 29-ந்தேதி காலையில் நடந்தது.
விமான நிலையத்தில் சரிந்த இருதய நோயாளி; உடனடியாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய சி.ஐ.எஸ்.எப். அதிகாரி
Published on

இம்பால்

மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த சுரேஷ் குமார் என்ற பயணி திடீரென மயங்கி சரிந்து விழுந்துள்ளார். இதனை கவனித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த காவல் ஆய்வாளர் பிகேந்திரா உடனடியாக செயல்பட்டு அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவல் அளித்ததுடன், சுவாசமற்று கிடந்த பயணிக்கு முதலுதவியும் கொடுத்து காப்பாற்றினார்.

இதன்பின்னர், சி.ஆர்.பி.எப். மருத்துவ பணியாளரான கிரண் என்ற சக பயணி, அவருக்கு வேண்டிய சிகிச்சைக்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதனால், அவருடைய சுயநினைவு மீண்டும் திரும்பியது. இதனை தொடர்ந்து, விமான நிலைய ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது.

Also Read
நேபாள மக்களவை சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றி தேர்வு
விமான நிலையத்தில் சரிந்த இருதய நோயாளி; உடனடியாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய சி.ஐ.எஸ்.எப். அதிகாரி

டெல்லி சர்வதேச இந்திரா காந்தி விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகை கடந்த மார்ச் 29-ந்தேதி காலையில் நடந்தது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையை (சி.ஐ.எஸ்.எப்.) சேர்ந்த வீரர்கள், பல்வேறு படை பிரிவினரும் கலந்து கொண்டனர். அவர்கள் விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையிலும், அதற்கு முன்பே தயாராக இருப்பதற்காகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படை, டெல்லி போலீசார், தேசிய பாதுகாப்பு படை, டெல்லி தீயணைப்பு படையினர், டி.ஜி.சி.ஏ., பி.சி.ஏ.எஸ்., மோப்ப நாய் பிரிவினர், பி.டி.டி.எஸ். மற்றும் மருத்துவ பணியாளர்களும் கூட்டாக இணைந்து இந்த கூட்டுப்பயிற்சிக்கான ஒத்திகையில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com