

மும்பை,
மராட்டியத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. முதல் நாள் பெய்த கனமழையிலேயே மும்பை நகரம் வெள்ளக்காடாக மாறின. சாலைகள் எங்கும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மின்சார ரெயில் போக்குவரத்து, பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டன.
கனமழையின்போது மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உள்பட பலியானோர் எண்ணிக்கை தற்போது 6 ஆக உயர்ந்துள்ளது.