டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழை: விமான சேவை பாதிப்பு

கனமழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
டெல்லியில் வெளுத்து வாங்கும் கனமழை: விமான சேவை பாதிப்பு
Published on

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

விமான சேவை பாதிப்பு

அதேபோல், கனமழையால் டெல்லியில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையால் டெல்லியில் தரையிறங்கிய முடியாமல் 12 விமானங்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்துள்ளனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com