காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான போக்குவரத்து பாதிப்பு

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான போக்குவரத்து பாதிப்பு
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நேற்று கடும் பனிப்பொழிவு நிலவியது. சமவெளிப் பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கின் மலைப்பகுதிகள், ஜம்மு, லடாக் ஆகிய பிராந்தியங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக குப்வாராவில் 25 செ.மீ. பனிப்பொழிவு காணப்பட்டது.

இதனால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதியம்வரை எந்த விமானமும் தரை இறங்க முடியவில்லை. ஒரு தனியார் நிறுவனம், நேற்று முழுவதும் தனது விமானங்களை ரத்து செய்தது .

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com