காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - புல்வாமாவில் மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை

‘சில்லாய் கலான்’ என்ற 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி காஷ்மீர் சென்று கொண்டிருக்கிறது.
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - புல்வாமாவில் மைனஸ் 2.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நேற்று உயரமான மலைப்பகுதிகளில் இரவு முழுவதும் கடுமையான பனிபொழிப்பு நிலவியது. இந்த மாதத்தில் முதல் முறையாக உறைநிலைக்கு மேல் பனிப்பொழி உயர்ந்து காணப்பட்டது. அதன்படி புல்வாமா பகுதியில் இரவு வெப்பநிலை மைனஸ் 2.7 டிகிரி செல்சியசாக காணப்பட்டது. அமர்நாத் யாத்திரையின் முகாம்களான பஹல்காமில் மைனஸ் 2.4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், காஷ்மீர் சில்லாய் கலான் என்று அழைக்கப்படும் 40 நாள் கடுமையான குளிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த கடுமையான குளிர் வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குவதால் லேசான மழை அல்லது பனிபொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com