மாணவர்களின் குரலுக்கு செவிசாயுங்கள் - டெல்லி போராட்டத்திற்கு மம்முட்டி ஆதரவு

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 34-வது நாளை எட்டி உள்ளது.
மாணவர்களின் குரலுக்கு செவிசாயுங்கள் - டெல்லி போராட்டத்திற்கு மம்முட்டி ஆதரவு
Published on

புதுடெல்லி,

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் இன்று 34-வது நாளை எட்டி உள்ளது.

தலைநகரில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜந்தர் மந்தர் பகுதியை சுற்றியுள்ள 1.5 கி.மீ சுற்றளவில் இன்று நள்ளிரவு வரை மொபைல் இணையச் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் இல்லத்திற்கு வெளியேயும் பிரிவு 163 அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் காவல்துறையினர் எச்சரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.

இதனிடையே இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.

இந்தநிலையில், மாணவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள் என்று மலையாள திரையுலக மெகா ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்களே நம் நாட்டின் உண்மையான செல்வம். அவர்களின் குரலுக்குச் செவிசாயுங்கள். அவர்களைப் பாதுகாத்திடுங்கள். அவர்களுக்கு அதிகாரமளியுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com