கஞ்சா செடி வளர்க்க இமாசல பிரதேச அரசு அனுமதி


கஞ்சா செடி வளர்க்க இமாசல பிரதேச அரசு அனுமதி
x
தினத்தந்தி 25 Jan 2025 1:04 PM IST (Updated: 25 Jan 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

இமாசல பிரதேசத்தில் கஞ்சா செடி வளர்க்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சிம்லா,

நாட்டில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இமாசல பிரதேசத்தில் கஞ்சா செடிகள் வளர்க்க அம்மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது தொழில், அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கட்டுப்பாடுகளுடன் கஞ்சா செடிகளை வளர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் பொருட்டு, காங்க்ரா மாவட்டம் பாலம்பூர் சவுத்ரி சர்வான் குமார் கிரிஷி விஸ்வவித்யாலயா மற்றும் சோலன் மாவட்டம் நவுனியில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். பர்மர் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தினர் மட்டும் குறிப்பிட்ட அளவு கஞ்சா செடியை வளர்த்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு, தோட்டக்கலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்படும். இந்த முயற்சிக்கான ஒருங்கிணைப்புத்துறையாக வேளாண் துறை நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற மாநிலங்களை பின்பற்றி மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சா செடியை வளர்க்க அனுமதி வழங்கியதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த செடி வளர்ப்பு கடுமையான கண்காணிப்பின் கீழ் இருக்கும் எனவும், மக்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story