நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்? - உமர் அப்துல்லா கேள்வி

பாகிஸ்தானுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
நிதி வழங்கினால் பாகிஸ்தான் எப்படி போரை நிறுத்தும்? - உமர் அப்துல்லா கேள்வி
Published on

காஷ்மீர்,

எல்லை பகுதியில் இந்தியா பாகிஸ்தான் இடையே நான்காவது நாளாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவ நிலையங்களை தாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் கடன் தொகை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) அனுமதி அளித்தது. கடன் வழங்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், சர்வதேச நிதியத்தின் நிர்வாக குழு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் மூலமாக பாகிஸ்தானுக்கு தொடர்ந்து நிதி வழங்கினால் அந்த நாடு எப்படி போர் பதற்றத்தை நிறுத்தும் என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளம் மூலமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா மீது பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா பதில் தாக்குதல் மட்டுமே நடத்தி வருவதாக தெரிவித்த அவர், பூஞ்ச், ரஜோரி, உரி, டாங்தார் உள்ளிட்ட பல இடங்களை அழிக்க பாகிஸ்தான் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களுக்கும் நிதி அளிக்க ஏன் சர்வதேச நிதியம் நினைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com