முகநூல் காதலியை பார்க்க பாகிஸ்தான் எல்லை தாண்டிய ஆந்திர என்ஜினீயர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு

முகநூல் காதலியை பார்க்க பாகிஸ்தான் எல்லை தாண்டிய ஆந்திர என்ஜினீயர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டார்.
முகநூல் காதலியை பார்க்க பாகிஸ்தான் எல்லை தாண்டிய ஆந்திர என்ஜினீயர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
Published on

எல்லை தாண்டிய காதலன்

ஆந்திர மாநிலம் விசாகாப்பட்டினத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் ஐதராபாத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். அப்போது முகநூலில் அறிமுகமான பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். ஒருநாள் காதலியின் புகைப்படத்தை பார்த்து அகம் மகிழந்து போனாதால் அவரை நேரில் பார்க்க கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். காதலியை கண்டு அவரது இதய சிறையில் அடைபடும் முன்பே, பிரசாந்தின் துரதிர்ஷ்டம் பாகிஸ்தான் போலீசார் கையில் சிக்கி இஸ்லாமாபாத் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசாந்த் பணி நிமித்தமாக பாகிஸ்தான் செல்வதாக வீட்டில் பொய்யான தகவல் சொல்லி இருந்த நிலையில் தங்கள் மகன் 2 ஆண்டுகள் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பிரசாந்த் தந்தை பாபுராவ், சைபராபாத் போலீசில் நிலையத்தில் கடந்த 2010-ம் ஆண்டு புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காதலியை தேடி சென்ற பிரசாந்த் பாகிஸ்தானில் இருந்து வெளியேற இயலாமல் தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வீடியோ தற்போது பாபுராவ் கண்ணில்பட இதனை ஆதாரமாக கொண்டு தன் மகன் பாகிஸ்தானில் இருப்பதை சுட்டிக்காட்டி அவனை உடனடியாக மீட்டு தரும்படி தந்தை பாபுராவ் விசாகப்பட்டினம் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து மாநில அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதினார். இந்த கடிதத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடம் பேசி பிரசாந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, பிரசாந்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி வாகா எல்லையில் இந்திய அதிகாரியிடம் பிரசாந்தை பாகிஸ்தான் அதிகாரிகள் இரு நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.

குடும்பத்தினாரின் முயற்சியால் 4 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு பிரசாந்த் வந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர். மேலும் பிரசாந்த் விடுதலைக்கு முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com