இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை; மந்திரி பரமேஸ்வர் பேட்டி

இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை என்று மந்திரி பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை; மந்திரி பரமேஸ்வர் பேட்டி
Published on

பெங்களூரு:

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் தூங்க செல்லும்போதும், காலையில் படுக்கையில் இருந்து எழும்போதும் மந்திரங்களை சொல்கிறேன். இது எனது பழக்கம் ஆகும். இந்து மதம் மீது பா.ஜனதாவினரை விட எங்களுக்கு அதிக மரியாதை உள்ளது. அதனால் மதம் குறித்து அவர்களிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. இந்து மதத்தை நான் எப்போதும் வேறு ரீதியில் புரிந்து கொண்டது இல்லை.

இந்து மதம் எப்போது தோன்றியது என்பது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். அதற்கு வேறு விதமான அர்த்தம் கற்பிக்க தேவை இல்லை. இஸ்லாம், ஜெயின் மதங்களை அதை தோற்றுவித்தவர்கள் உள்ளனர். ஆனால் இந்து மதத்திற்கு தோற்றுவித்தவர் யார் என்று மக்கள் கேட்கிறார்கள். நாம் அதை புரிந்துகொள்ள வேண்டும் என்று தான் பேசினேன். இதை சர்ச்சை என்று சொன்னால் நான் என்ன சொல்ல முடியும். இந்து மதம் குறித்து நான் தவறாக பேசவில்லை.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com