தமிழக ஜவுளித்துறையின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்கிறேன் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங்

காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி
Published on

புது டெல்லி,

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி, மத்திய ஜவுளித்துறை மந்திரி கிரிராஜ் சிங்யிடம் துறை சம்பந்தப்பட்ட கீழ்க்காணும் கோரிக்கை விண்ணப்பத்தினை நேற்று நேரில் சமர்ப்பித்தார்.

1. ஈரோடு மாவட்டத்தில் பிரத்யேக விசைத்தறி பூங்கா அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல்

2. காஞ்சிபுரத்தில் பட்டு ஏற்றுமதி வர்த்தக வசதி மையம்

3. கைத்தறி வளர்ச்சிக்கான முன்னெடுப்புகள்

4. ஆரணி கைத்தறிப் பட்டுப் பூங்கா – இரண்டாம் கட்டத்திற்கான நிதி ஒப்புதல்

5. கைத்தறித் தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளித்தல்

6. தொடக்க நிறுவனங்கள் / முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கான சிறப்பு கூறு நிதியுதவி

7. நூல் விநியோகத் திட்டத்தின் கீழ் ஜரிகைக்கு 15 விழுக்காடு மானியம் வழங்குதல்

8. தமிழ்நாடு ஜரி லிமிடெட், காஞ்சிபுரத்தில் வெள்ளி இழை உற்பத்தி அலகு அமைத்தல்

9. மத்திய அரசிடமிருந்து மாநில அரசிற்கு விடுவிக்கப்பட வேண்டிய பல்வேறு திட்ட நிலுவைகள்.

10. ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் ஜவுளி தொகுதிகளில் பூஜ்ஜிய திரவவெளியேற்ற வசதியுடன் கூடிய பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நிதியுதவி வழங்குதல் குறித்து

11. நூற்பாலைகளின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது 31.10.2026 வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள பருத்தி இறக்குமதிக்கான 11% இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்குதல்

12. தொழில் நுட்ப ஜவுளி மேம்பாடு மற்றும் ஜவுளி ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அரசு தொழில் துறை பிரதிநிதிகள் குழு வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நிதியுதவி வழங்குதல்

13. பாதுகாப்பு (Site Adjacent Factory Employee Accommodation) திட்டத்தை விரைந்து செயல்படுத்துதல்

14. தேனி வைகை உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்த கால நீட்டிப்பு வழங்குதல் மற்றும் வருவாய் வசூல் சட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குதல்

15. மத்திய அரசால் நிறுத்தப்பட்ட ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்துதல்

16. மதுரையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், 75:25 என்ற விகிதத்தில் நிதி பங்களிப்பு அடிப்படையில் சந்தைப்படுத்தல் மற்றும் கொள்முதல் மையம் ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவி கோருதல்.

17. திருநெல்வேலியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில், 75:25 என்ற விகிதத்தில் நிதிப் பங்களிப்புடன் கூடிய 'சந்தைப்படுத்துதல் மற்றும் கொள்முதல் மையம்' ஒன்றை அமைப்பதற்கான நிதி உதவி கோரப்படுகிறது.

18. தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் அமைந்துள்ள பஞ்சலோக சிற்ப கைத்திற தொழிலுக்கான பொது வசதி மையத்தை ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான நிதியுதவி கோருதல்

19. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரச்சிற்ப கைவினைக்கான புதிய பொது வசதி மையம் அமைப்பதற்கு ரூ.3.00 கோடி நிதியுதவி கோருதல்

20.சர்வதேச சந்தைப்படுத்துதல் நிகழ்வுகள் மற்றும் காந்தி சில்ப் பஜார் கண்காட்சிகள் (3 சர்வதேச / 2 தேசிய அளவில் / 3 மாநில அளவில் / 2 மாவட்ட அளவில்) ஆகியவற்றை நடத்துவதற்கான மானிய கோரிக்கை.

மேற்படி கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக மத்திய ஜவுளி துறை மந்திரியிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது நீலம் சமி ராவ் ஐஏஎஸ், மத்திய அரசின் ஜவுளி துறை செயலாளர், வெங்கடேஷ் ஐஏஎஸ்., தமிழ்நாடு அரசின் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மை செயலாளர், உமா மகேஸ்வரி ஐஏஎஸ்., தமிழ்நாடு அரசின் கைத்தறி இயக்குநர் மற்றும்இன்னோசென்ட் திவ்யா ஐஏஎஸ்., கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com