

புதுடெல்லி,
புற்று நோய். போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக உலகின் மிக உயரமான கிளிமஞ்சாரோ மலையில் சாதனை புரிந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோனல் கோயல்.
திரிபுரா மாநில மூத்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோனல் கோயல் (வயது 43). கடந்த 2007-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் பங்கேற்ற அவர். அகில இந்திய அளவில் 13-வது இடத்தை பிடித்து, 2008-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தற்போது டெல்லியில் உள்ள திரிபுரா பவனில் 'ரெசிடென்ட் கமிஷனராக பணியாற்றி வருகிறார்.
சமூக ஊடகங்களில் 25 லட்சத்துக்கும் மேல் பின் தொடர்பவர்களை கொண்டுள்ள சோனல் கோயல், டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி தனது தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து இதன் மூலம், இளைஞர்களுக்கு வாழ்க்கையில் ஆலோசனைகளை வழங்கி அவர்களை ஊக் குவிக்கிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் தனது தந்தையை இழந்த சோனல் கோயல் இந்த கொடிய நோய் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தின் தீய விளைவு கள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்காக, தான்சானியாவில் உள்ள ஆப்பிரிக்காவின் மிக உயரமான மலைச்சிகரமான கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறினார்.
கிளிமஞ்சாரோவின் 3 அதிகாரப்பூர்வ சிகர புள்ளிகளில் ஒன்றான 18 ஆயிரத்து 885 அடி உய ரமுள்ள ஸ்டெல்லா பாயிண்ட்டை அடைந்து அங்கு தேசிய கொடியை ஏற்றினார். கிளிமஞ் சாரோ மலை ஒரு செயலற்ற எரிமலை ஆகும். இது உலகின் மிக உயரமான தனித்து நிற் கும் மலையாகவும் திகழ்கிறது. சோனல் கோயல் சமீபத்தில் சவாலான லெமோஷோ பாதை வழியாக 8 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா, அமெரிக்கா, கனடாவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவில், அவர் மட்டுமே பெண்ணாக இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
தனது பயணத்தை முடித்து திரும்பிய சோனல் கோயல் கூறும்போது "கடந்த 2023-ம் ஆண்டு புற்றுநோயால் எனது தந்தையை இழந்தேன். அவரது மறைவு என் வாழ்வில் ஒரு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது எனது தனிப்பட்ட துக்கத்தை ஒரு அர்த்தமுள்ள சமூக அர்ப்பணிப்பாக மாற்றுவதற்கான எனது உறுதியையும் வலுப்படுத்தியது. புற்றுநோய் தடுப்பு. ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறித்து விழிப்புணர்வை பரப்ப முடிவு செய் தேன். இதன் மூலம், பரந்த விழிப்புணர்வும் சரியான நேரத்தில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையும் மற்ற குடும்பங்கள் தவிர்க்கக்கூடிய துன்பங்களை தவிர்க்க உதவும் என்று நம்பு கிறேன்” என்றார்.
இந்தியாவில் இந்த சாதனையை நிகழ்த்திய பணியில் இருக்கும் ஒரே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோனல் கோயல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.