சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,521 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராய்ப்பூர்,

இந்தியாவில் தற்போது 2-ம் அலை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா முதல் அலை பரவலின் போது பெரிய அளவில் பாதிக்காத மாநிலங்கள் கூட 2-வது அலையில் சிக்கி கொண்டுள்ளது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாகவே சத்தீஸ்கரில் கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சத்தீஸ்கரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,521 பேர் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,297 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது 90,277 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் இன்று 82 பேர் உயிரிழக்க, தொற்று பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 4,899 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,48,121 பேர் குணமடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com