

புதுடெல்லி,
டெல்லியில் உள்ள கவுஸ் காசி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு டிப்-டாப் உடையணிந்த நபர் ஒருவர், பொதுமக்களிடம் தான் தமிழகத்தைச் சேர்ந்த போலீஸ் ஐ.ஜி. எனக்கூறி மிரட்டிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், அதே பகுதியில் குடிநீர் குழாய்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் ராஜீவ் குப்தா (வயது 53) என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜீவ் குப்தாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3 போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனர்.