டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை

டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை செய்துகொண்டார்.
டெல்லியில் விமானப்படை தளபதி வீட்டில் வேலைக்காரர் தற்கொலை
Published on

புதுடெல்லி,

இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா வீடு, டெல்லியில் அக்பர் சாலையில் இருக்கிறது. அந்த வீட்டில் ஒப்பந்த ஊழியராக வீட்டு வேலைகளை செய்து வந்தவர், மனோஜ் குமார் (வயது 30). அவர், விமானப்படை தளபதியின் வீட்டில் உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடிதம் எதையும் அவர் எழுதி வைக்கவில்லை.

இருப்பினும், சொந்த பிரச்சினையால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com