

லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியின் முலாயம்சிங் அரசில் மந்திரியாக இருந்தவரும், 6 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து தற்போது எம்.எல்.சி.யாக உள்ள சவுத்ரி வீரேந்திரசிங் நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அவருடன் அவரது நெருங்கிய ஆதரவாளர்களான மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மனிஷ் சவுகான், ஹர்மிந்தர் சவுகான் ஆகியோரும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
சவுத்ரி வீரேந்திரசிங் மேற்கு உத்தரபிரதேசத்தில் குஜ்ஜார் சமூகத்தின் முக்கிய தலைவராகவும் உள்ளார். இதன்மூலம் இந்த தேர்தலில் அந்த பகுதியில் பா.ஜனதாவுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கும் என கருதப்படுகிறது.