உற்பத்திச் செலவு அதிகரிப்பு: சிமெண்ட் மூட்டை விலை உயர்கிறது!

கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பருவமழையால் சிமெண்ட் விலை குறைந்தது.
உற்பத்திச் செலவு அதிகரிப்பு: சிமெண்ட் மூட்டை விலை உயர்கிறது!
Published on: 

புதுடெல்லி,

கட்டுமானப் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் சிமெண்ட் விலை வரும் வாரங்களில் மூட்டைக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர வாய்ப்புள்ளதாக 'எம்.கே. ரிசர்ச்' ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

உற்பத்திச் செலவு உயர்வு

நிலக்கரி, பெட்கோக் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை சிமெண்ட் உற்பத்திச் செலவை உயர்த்தியுள்ளன.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் சிமெண்ட் மூட்டைக்கு ரூ.15 வரை விலை உயர்த்தப்பட்டபோதிலும், அதிகரித்த உற்பத்திச் செலவுகளை ஈடுகட்ட அது போதுமானதாக இல்லை என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பருவமழையால் சிமெண்ட் விலை குறைந்தது. இதனால் சிமெண்ட் நிறுவனங்களின் வருவாயும் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் சிமெண்ட் விற்பனை அளவு 7 முதல் 8 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com