டெல்லியில் இன்று ‘இந்தியா’ கூட்டணி ஆலோசனை கூட்டம்: திமுக புறக்கணிப்பு

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
காங்கிரஸ்
Published on

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணி தனது ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று (திங்கட்கிழமை) நடத்துகிறது.

'இந்தியா ஜன்பந்தன்' என்கிற இந்த கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாகவும், காங்கிரஸ் எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதன் பன்முகத்தன்மை மூலம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கிறது என்றும், சில கட்சிகள் தத்தமது சொந்த காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு

'கோடிக்கணக்கான இந்தியர்களின் வாக்குரிமையைப் பறிப்பது, அரசியலமைப்பை தினமும் தாக்குவது, புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைப்பது, கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகச் சேதப்படுத்துவது, இடைவிடாத விலை உயர்வால் குடும்ப பட்ஜெட்டுகளை உடைப்பது, லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் காட்டிக்கொடுப்பது, முதலீட்டுச் சூழலை மந்தப்படுத்துவது, அதன் வெளியுறவுக் கொள்கையால் தேசிய நலனைப் பாதிப்பது போன்ற மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தபோதிலும், சில கட்சிகள் தத்தமது சொந்த காரணங்களுக்காக இந்த குறிப்பிட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை வெளிப்படுத்தியுள்ளன' என்று ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறினார்.

"இந்தியாவைப் போலவே, "இந்தியா ஜன்பந்தன்" அதன் பன்முகத்தன்மையின் மூலம் தொடர்ந்து ஒற்றுமையாக நிற்கிறது" என்றும் தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்குப் பின்னர் நடைபெறும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

திமுக புறக்கணிப்பு

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கூட்டணி முறிவால் தி.மு.க. இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே தி.மு.க. தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. காங்கிரசை குற்றம் சாட்டி தி.மு.க. விலகி இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக விலகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com