இந்தியா கூட்டணி பேரணியால் ரூ.10,000 கோடி வர்த்தகம் பாதிப்பு : டெல்லி வணிகர்கள் குற்றச்சாட்டு

பண்டிகைக் காலத்தில் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பேரணி திட்டமிட்டபடி நடைபெற்றது.
டெல்லி வணிகர்கள்
டெல்லி வணிகர்கள்
Published on: 

புதுடெல்லி:

டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பேரணியால் ரூ.11,000 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி நடைபெற்றது. இந்தியா கூட்டணியின் பேரணியால் வணிகர்களுக்கு வர்த்தம் பாதிக்கப்பட்டதாக வணிக மற்றும் தொழில் சபையின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

வெறிச்சோடிய அங்காடிகள்

காஷ்மீரி கேட், சாந்தினி சவுக், சதர் பஜார், சாவ்ரி பஜார், கரோல் பாக், கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட முக்கிய சந்தைகளில் மொத்தம் சுமார் 3 லட்சம் கடைகள் உள்ளன. இதில் சுமார் 2.5 லட்சம் கடைகள் முழுமையாக மூடப்பட்டதாகவும், 80 சதவீத வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. மத்திய டெல்லியில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது. அங்காடிகள் செயல்பட்ட சில இடங்களிலும் வாடிக்கையாளர்களின் வருகை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ரூ.10,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ‘இந்த இழப்பை ஈடு செய்வது யார்?’ என்ற கேள்வி எழுகிறது” என்றார்.

ராகுல் காந்திக்கு ஏற்கெனவே கடிதம்

முன்னதாக, இந்தியா கூட்டணியின் பேரணியை தீபாவளிக்குப் பிறகு நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வியாபாரிகள் சங்கம் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியிருந்தது.பண்டிகைக் காலத்தில் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் பேரணியை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், பேரணி திட்டமிட்டபடி நடைபெற்றது.

X