

கொல்கத்தா,
பாகிஸ்தானின் அணுகுண்டு மிரட்டலுக்கு இந்தியாவின் கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் நாராவனே செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தான் தொடர்ந்து அணுகுண்டு பூச்சாண்டி காட்டிவருகிறது. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம். 370-வது சட்டப்பிரிவு ஒரு ஏற்பாட்டை செயல்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்டது. அதன் செயல்பாட்டுக்குரிய ஆயுட்காலம் முடிந்துவிட்டது, அதனாலேயே அது ரத்து செய்யப்பட்டது.
காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகளுக்கு 5 மாவட்டங்கள் மட்டுமே பொறுப்பு. 5 மாவட்டங்களை மீட்க ஒட்டுமொத்த நாடே ஈடுபட வேண்டுமா? அங்கு சம்பவங்கள் நடைபெறும்போது அதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம். உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் சிறந்த, பிரகாசமான எதிர்காலம் தேவை என்றால், அதற்கு அமைதி ஒன்று தான் வழி என்று அவர் கூறினார்.