இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; போலி டிக்கெட்டுகள் விற்ற கும்பல் கைது

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; போலி டிக்கெட்டுகள் விற்ற கும்பல் கைது
Published on

ஆமதாபாத்,

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி 14-ந்தேதி குஜராத்தின் ஆமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியை காண போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்துவந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த போலி டிக்கெட்டுகள், கலர் பிரிண்டர், கணினி மற்றும் மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

இத கும்பல் மொத்தம் 200 போலி டிக்கெட்டுகளை அச்சடித்து உள்ளனர். சமூக ஊடகங்களில் தங்கள் தொடர்புகளை பயன்படுத்தி டிக்கெட்டுகளை விற்பனை செய்து உள்ளனர். டிக்கெட்டுகளை ரூ.2,000 முதல் ரூ.20,000 வரை விற்பனை செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com