ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ராணுவ தலங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி

இந்தியா , பாகிஸ்தான் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் ராணுவ தலங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயற்சி
Published on

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மீது பாகிஸ்தான் இன்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப்பில் உள்ள ராணுவ தலங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் இன்று முயற்சித்தது. ஜம்மு, பதான்கோட், உதம்பூர் ஆகிய 3 பகுதிகளில் உள்ள ராணுவ தலங்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவம் முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா முறியடித்துள்ளது. இந்த தாக்குதல் முயற்சியில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com