இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள் மூடல்

இந்தியா , பாகிஸ்தான் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது
இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்கள் மூடல்
Published on

டெல்லி,

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் இன்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கபப்ட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகர், சண்டிகர், அம்ரித்சர், பாடியாலா, சிம்லா உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com