2030-ம் ஆண்டுக்குள் ரூ.95,079 கோடி வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம்: ரஷியாவுக்கான இந்திய தூதர்

இந்தியா-ரஷியா நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு பற்றி பேசும்போது, வர்த்தகம் வளர்ந்து வருகிறது.
2030-ம் ஆண்டுக்குள் ரூ.95,079 கோடி வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயம்:  ரஷியாவுக்கான இந்திய தூதர்
Published on: 

மாஸ்கோ

2030-ம் ஆண்டுக்குள் ரூ.95,079 கோடி அளவுக்கு வர்த்தகம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என ரஷியாவுக்கான இந்திய தூதர் கூறியுள்ளார்.

ரஷியாவுக்கான இந்திய தூதர் வினய் குமார் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்தியா-ரஷியா நாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு பற்றி பேசும்போது, வர்த்தகம் வளர்ந்து வருகிறது.

வர்த்தக விரிவாக்கம்

பிரதமர் மோடி மற்றும் ரஷிய கூட்டமைப்பு நிர்ணயித்து உள்ள இலக்குகள் எங்களுக்கு உள்ளன. இதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் ரூ.95 ஆயிரத்து 79 கோடி (100 பில்லியன் அமெரிக்க டாலர்) என்ற அளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போது உள்ள துறைகளில் வர்த்தக விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதனுடன் புதிய துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எரிசக்தியில் ஒத்துழைப்பு தொடருகிறது என்றார். இதேபோன்று, தமிழகத்தில் கூடங்குளம் அணு உலை திட்ட பணிகளை ரோசாட்டம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அணு உலையின் 3 மற்றும் 4 ஆகிய பிரிவுகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com