உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-ரஷியா ஆலோசனை

உயர்கல்வித்துறையில் பரஸ்பர முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் குறித்து இந்தியா-ரஷியாவும் இடையே ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்தியா-ரஷியா ஆலோசனை
Published on

புதுடெல்லி,

மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் தீப்தி கவுர் முகர்ஜி மற்றும் ரஷிய அரசின் அறிவியல் மற்றும் உயர்கல்வித்துறை இணை மந்திரி மொகிலெவ்ஸ்கி கான்ஸ்டான்டின் இலிச் ஆகியோர் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இரு தரப்பினரும் உயர்கல்வித்துறையில் பரஸ்பர முக்கியத்துவம் கொண்ட அம்சங்கள் குறித்து விவாதித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே உயர்கல்வித்துறை சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தினர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட அதிகாரத்துவ மாற்றங்களின் ஒரு பகுதியாக தீப்தி கவுர் முகர்ஜி உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் பஞ்சாயத்து அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்ட வினீத் ஜோஷிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com