போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு மருத்துவ, நிவாரண உதவிகளை அனுப்பியது இந்தியா

போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
Image Courtesy : @MEAIndia
Image Courtesy : @MEAIndia
Published on

புதுடெல்லி,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் 3-வது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ராபா எல்லை வழியாக காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டன. இருப்பினும் காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் போரால் பாதிக்கப்பட்ட காசாவிற்கு இந்திய அரசு சார்பில் மருத்துவ, நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்ஷி தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

"காசா மக்களுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை அனுப்புகிறது. பாலஸ்தீன மக்களுக்காக சுமார் 6.5 டன் மருத்துவ உதவிப் பொருட்கள் மற்றும் 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஐ.ஏ.அப். சி-17 விமானம் எகிப்தில் உள்ள எல்-அரிஷ் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சைப் பொருட்கள், கூடாரங்கள், தார்ப்பாய்கள், சுகாதாரப் பொருட்கள், தண்ணீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Arindam Bagchi (@MEAIndia) October 22, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com