8 மாதங்களில் 6.25 லட்சம் டன்... துவரம் பருப்பு இறக்குமதி 44 சதவீதம் அதிகரிப்பு

கடந்த 2 வாரங்களாக சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையில் துவரம் பருப்பு விலை குறைந்து வருகிறது.
துவரம் பருப்பு
கோப்புப்படம்
Published on: 

புதுடெல்லி,

இந்தியாவில் துவரம் பருப்பு இறக்குமதி கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில் 6.25 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய பயறு மற்றும் தானிய சங்கம் தெரிவித்துள்ளது.

6.25 லட்சம் டன் இறக்குமதி

கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 4.34 லட்சம் டன் துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 6.25 லட்சம் டன்னாக இறக்குமதி அதிகரித்துள்ளது. துவரை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் கர்நாடகா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காரீப் பருவத்தில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் துவரை சாகுபடி குறையும் என்ற எதிர்பார்ப்பில் இறக்குமதி அதிகரித்துள்ளது.

விலை குறைந்தது

கடந்த 2 வாரங்களாக சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு சந்தையில் துவரம் பருப்பு விலை குறைந்து வருகிறது. குவிண்டாலுக்கு ரூ.200 வரை விலை குறைந்துள்ளது. ஏற்கனவே பண்டிகை கால தேவையை கருத்தில் கொண்டு துவரம் பருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நாடு வாரியாக இறக்குமதி விவரம்

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட துவரம் பருப்பின் அளவு வருமாறு:

மொசாம்பிக் - 2.29 லட்சம் டன்

மியான்மர் - 1.50 லட்சம் டன்

தான்சானியா - 1.10 லட்சம் டன்

சூடான் - 71,808 டன்

பிற நாடுகள் - 61,138 டன்

X

Daily Thanthi
www.dailythanthi.com