பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க உள்ளதாக தகவல்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #SAARC
பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க உள்ளதாக தகவல்
Published on

புதுடெல்லி,

தெற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் மாநாடு அவ்வப்போது நடத்தப்படுவது வழக்கம். இந்தியா , பாகிஸ்தான் இலங்கை, மாலத்தீவு, உள்ளிட்ட 8 ஆசிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

இந்த சூழலில், நடப்பு ஆண்டு பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெற உள்ளதாக தெரிகிறது. இந்த மாநாட்டில், இந்தியா பங்கேற்காது என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான உறவில் சுமூகமான நிலை இல்லாததால், மாநாட்டில் பங்கேற்பதில் இருந்து இந்தியா, பின்வாங்க திட்டமிட்டு இருக்க கூடும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றிணைந்து செல்ல முடியாது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஏற்கனவே, கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில், நடைபெறுவதாக இருந்த சார்க் மாநாடு, இந்தியா புறக்கணித்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்டது. உரி செக்டாரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்படனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சார்க் மாநாட்டை அப்போது இந்தியா புறக்கணித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com