இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதியில் ரூ.5¾ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் தங்கம் கடத்தி கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதியில் ரூ.5¾ கோடி தங்க கட்டிகள் பறிமுதல்
Published on

கொல்கத்தா,

இந்தியா-வங்காளதேச எல்லைப் பகுதியான பாசிர்ஹாத், இதிந்தகாத் படகு தளம் பகுதியில் கடந்த 22ந்தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த படகில் தோளில் பையுடன் சிறுவன் ஒருவன் நின்றிருந்தான்.

சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அவன் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், ரூ.4 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள சுமார் 13 கிலோ எடைகொண்ட 112 தங்க கட்டிகள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இதையடுத்து ஹரிஸ்பூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர். அங்கிருந்து ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்புள்ள 4.8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com