

புதுடெல்லி,
ஜூலை 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச்செல்லும் பிரதமர், ஜூலை 11-ல் நாடு திரும்புகிறார்.
இதன் மூலம் 40 ஆண்டுகளில் நியூசிலாந்து செல்லும் முதல் இந்திய பிரதமராகிறார் மோடி. கடைசியாக 1986-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நியூசிலாந்து சென்றார்.
பிரதமர் மோடியின் நியூசிலாந்து பயணம் குறித்து அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் வெளியிட்ட அறிக்கையி கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் மோடி, அடுத்த வாரத்தில் நியூசிலாந்துக்கு முதல் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. மேலும், நியூசிலாந்தின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவும் முக்கியத்துவம் பெறுகிறது.
40 ஆண்டுகளில் ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்துக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதால், பிரதமர் மோடியின் பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது, பிரதமர் மோடியை நியூசிலாந்திற்கு வரவேற்பதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என அதில் தெரிவித்துள்ளார்.