இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக ராணுவ ஒத்திகை

இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக ராணுவ ஒத்திகை ரஷியாவில் அடுத்த மாதம் நடக்கிறது
இந்தியா-பாகிஸ்தான் கூட்டாக ராணுவ ஒத்திகை
Published on

புதுடெல்லி,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி ரஷியாவின் மேற்கு பகுதி நகரான செல்யாபின்ஸ்க் நகரில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 20ந்தேதி முதல் 29ந்தேதி முடிய அமைதி இயக்கம் என்னும் தலைப்பில் நடைபெற உள்ளது.

இதையடுத்து இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ரஷியா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன. இந்தியாவின் சார்பில் தரைப்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த 200 பேர் இதில் கலந்து கொள்கின்றனர்.

பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றால் உருவாகும் அச்சுறுத்தல்களை தடுத்திடவும் இப்பிரச்சினையில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படும் விதமாகவும் இந்த கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com