இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைவு

2021-22 ஆம் நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2021-22 ஆம் நிதியாண்டில் மேலும் குறைவு
Published on

புதுடெல்லி,

நமது நாட்டில் 173 அனல்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரிதான் ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரி தவிர, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ள காரணத்தால், வெளிநாட்டு இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2020-21 ஆம் நிதியாண்டில் 21.5 கோடி டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 20.9 கோடி டன்னாக குறைந்துள்ளது. அதே சமயம் 2020-21 ஆம் நிதியாண்டில் 71.6 கோடி டன்னாக இருந்த அகில இந்திய அளவிலான நிலக்கரி உற்பத்தி, 2021-22 ஆம் நிதியாண்டில் 77.7 கோடி டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com