டெல்லியில் நாட்டின் மிகப்பெரிய முதல் போக்குவரத்து வாகன கண்காட்சி - பிரதமர் மோடி பங்கேற்பு

இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 600-க்கும் அதிகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர்.
டெல்லியில் நாட்டின் மிகப்பெரிய முதல் போக்குவரத்து வாகன கண்காட்சி - பிரதமர் மோடி பங்கேற்பு
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2024ம் ஆண்டிற்காக நாட்டின் மிகப்பெரிய முதல் போக்குவரத்து வாகன கண்காட்சி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு உரையாற்றுகிறார்.

போக்குவரத்து வாகனங்கள் உற்பத்தியில் இந்தியாவின் திறன்களை இக்கண்காட்சி வெளிப்படுத்தும். இதில் வாகன கண்காட்சிகள், மாநாடுகள், வாங்குவோர்-விற்போர் சந்திப்புகள், மாநில அரசுகளின் சார்பிலான அமர்வுகள், சாலைப் பாதுகாப்பு அரங்குகள், கோ-கார்ட்டிங் எனப்படும் கார் பந்தயம் போன்றவை இடம்பெறும்.

இந்த கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 600-க்கும் அதிகமான வாகன உதிரிபாக உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். 13-க்கும் அதிகமான உலகளாவிய சந்தைகளில் இருந்து 1,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த நிகழ்வில் தங்கள் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள், சேவைகளைக் காட்சிப்படுத்தும்.

அதேபோல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், தங்கள் பகுதியில் உள்ள போக்குவரத்து வாகன உற்பத்திப் பங்களிப்பை விளக்கும் வகையிலான அமர்வுகளும் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com