

கவுத்தியிலிருந்து பெங்களூருக்கு இண்டிகோ விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்று கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு பெங்களூருவில் உள்ள கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, விமான நிலைய பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால், தடுமாறிய விமானத்தின் வால்பகுதி எதிர்பாராத வகையில் தரையில் மோதியது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்தார். இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் கூறியதாவது;
விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விமானம் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். அந்த விமானம் பராமரிப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேவையான அனுமதிகள் பெறப்பட்ட பிறகு விமானம் மீண்டும் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.