

எட்டா,
உத்தரபிரதேச மாநிலம், எட்டா நகரில் திலக் சிங் என்ற போலி டாக்டா, 2 மாத குழந்தைக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது. இதையடுத்து அவர், குழந்தையின் பெற்றோரிடம் தகவலை தெரிவிக்காமல் மூடி மறைக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக முதுநிலை மருத்துவ அதிகாரி, போலி டாக்டா திலக் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன்படி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.