இந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா? - சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம்

இந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா என சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை இழிவுபடுத்தி விட்டு இம்ரான் கானை புகழ்வதா? - சித்துவுக்கு பா.ஜனதா கண்டனம்
Published on

புதுடெல்லி,

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து, பாகிஸ்தானையும், அதன் பிரதமர் இம்ரான் கானையும் புகழ்ந்து பேசியுள்ளார். இம்ரான் கானை ஷாஹென்ஷா என்று கூறியுள்ளார்.

ஆனால், அதே சமயத்தில், கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து விட்டது, இந்தியர்களுக்கு பாகிஸ்தான் அளித்த சலுகை போன்றது என்றும் கூறியுள்ளார். இப்படி இந்தியாவை இழிவுபடுத்தி சித்து பேசியதற்காக சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.

14 கோடி சீக்கியர்கள் சார்பில் பேச சித்துவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இவ்வாறு அவர் கூறினார்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து, காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டுவில் வெளியான கட்டுரைக்கு சம்பித் பத்ரா கண்டனம் தெரிவித்தார். அதில், இந்திய சுப்ரீம் கோர்ட்டையும், பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டையும் ஒப்பிட்டு கருத்து கூறப்பட்டு இருந்தது.

இருப்பினும், அந்த கட்டுரையை நேஷனல் ஹெரால்டு தனது இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டது. அது, கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com