மக்களை விட பணம் முக்கியமா? மத்திய அரசை கடுமையாக விமர்சித்த உத்தவ் சிவசேனா எம்.பி


மக்களை விட பணம் முக்கியமா? மத்திய அரசை கடுமையாக விமர்சித்த உத்தவ் சிவசேனா எம்.பி
x
தினத்தந்தி 3 Aug 2025 5:08 PM IST (Updated: 3 Aug 2025 5:50 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாட அனுமதித்த இந்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மும்பை,

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்தது. இதன் காரணமாக, நடப்பாண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா எனக் கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில், திட்டமிட்டப்படி ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த தொடரில் ஒரே பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இதற்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தை இந்திய அரசு அனுமதித்ததை சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) எம்.பி பிரியங்கா சவுத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: "நமது சக இந்திய மக்கள் மற்றும் சீருடையில் உள்ள நமது வீரர்கள் சிந்திய ரத்தத்தை விட பணம் தான் முக்கியமா? ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாசாங்கு செய்த இந்திய அரசுக்கு இது அவமானம். இதன் மூலம் பிசிசிஐ ஈட்ட நினைப்பது சபிக்கப்பட்ட பணம் ஆகும்" என பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

1 More update

Next Story