வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம்: காங்கிரசுக்கு மத்திய மந்திரி சவால்

தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்பார்களா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு
Published on: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராடி வருகிறது.ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் தோல்வி குறித்து விளக்க முடியுமா? என சவால் விட்டு உள்ளது. இது குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில், 'தனது ஆட்சி யில் நியமிக்கப்பட்ட தேர்தல் கமிஷனர்களின் கீழ் நடந்த 2014-ம் ஆண்டு தேர்த லில் காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் சுருங்கியது எப்படி?' என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் 2024-ம் ஆண்டு 3-வது முறையாக காங்கிரஸ் தோல்வி அடைந்தபோது தற்போதைய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவியில் இல்லை எனக்கூறியுள்ள ரிஜிஜு, 2014 முதல் 2026 வரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள் ராஜினாமா செய்து மன்னிப்பு கேட்பார்களா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை ஆதரித்துள்ள ரிஜிஜு, சட்ட விரோத குடியேறிகள், இறந்தவர்கள், இடம் மாறியவர்கள், போலி சேர்க்கைகளை நீக்க வேண்டும் எனவும், இதை காங்கிரஸ் எதிர்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

X