இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணத்தை பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? உங்களுக்காக இதோ... வீடியோ உள்ளே..!

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நள்ளிரவில் நிகழ்ந்தது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
இந்தாண்டின் கடைசி சந்திர கிரகணத்தை பார்க்க மிஸ் பண்ணிட்டீங்களா? உங்களுக்காக இதோ... வீடியோ உள்ளே..!
Published on

புதுடெல்லி,

பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சந்திர கிரகணமானது எப்போதும் பவுர்ணமி நாட்களில் நிகழும் நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமியான நேற்று நள்ளிரவில் சந்திர கிரகணம் நிகழ்ந்தது.

இந்தியாவில் கிரகணம் நள்ளிரவு 1:05 மணிக்கு தொடங்கி 2:23 மணி வரை தென்பட்டது. இது பகுதி கிரகணமாக நிகழ்ந்ததால் சந்திரனின் முழுப்பகுதியில் பூஜ்ஜியம் புள்ளி 126 என்ற மிகச்சிறிய அளவு மட்டுமே மறைந்தது. இந்த நிகழ்வை டெல்லி, மராட்டியம், குஜராத், மேற்குவங்கம் உள்ளிட்ட வடமாநிலங்கள் மட்டுமின்றி அண்டை நாடான நேபாளத்திலும் காண முடிந்தது. சந்திர கிரகணத்தை டெல்லி நேரு கோளரங்கத்தில் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

இதேபோன்று சென்னையில் நள்ளிரவில் சந்திரகிரகணம் தென்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கிரகணம் தென்பட்ட நிலையில், பொதுமக்கள் வெறும் கண்களால் காண முடிந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com