

அந்த ஓவியத்தில் ஒரு உடைந்த கட்டிலில் ஒரு குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியான முகத்துடன் தூங்கி கொண்டிருக்கின்றனர். இருண்ட அறையில், கூரை ஒழுகும் நிலையிலும், மோசமான ஏழ்மையிலும் அவர்களது முகத்தில் மகிழ்ச்சி திளைக்கிறது. சமூக வலைத்தளத்தில் இந்த பதிவுக்கு மகிழ்ச்சியின் புகைப்படம் என ஷாகித் கபூர் பெயரிட்டுள்ளார்.
இந்த ஓவியத்தை துருக்கியை சேர்ந்த நசீம் ஹிக்மத் என்ற பிரபல ஓவியர் வரைந்துள்ளார். மேலும் இந்த படத்தை பதிவு செய்து மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. அதை ஏற்று கொள்வது ஆகும். சிந்தனையை தூண்டுகிறது என்று ஷாகித் கபூர் கூறியுள்ளார். அவர் இதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பின்னர் அவரை பின்தொடர்பவர்கள் பலர் இந்த படத்தை ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.