

இந்த தீபத்திருநாளில், அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்யும் அனுபவத்தில் ஒரு புதிய முயற்சி இணைகிறது. ஆம், ITC மங்கள்தீப் முன்னெடுத்துள்ள ‘ஹர் பக்த் ஸ்ரீ ராம் தக்’ (ஒவ்வொரு பக்தரும் ஸ்ரீராமரை அடைய) என்ற முயற்சிதான் அது.
இதன்மூலம், பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் பால ராமரை எளிதாகவும், தன்னம்பிக்கையுடனும் வழிபட, ராமர் கோவிலில் பிரெய்லி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கைப்பிடிகள் அமைக்கப்படுகின்றன.
இந்த நல்ல முயற்சியில் மக்களும் பங்கெடுக்கலாம்! இதற்கு https://ayodhyamangaldeepotsav.com/ என்ற இணையதளத்திற்குச் சென்று, ஒரே ஒரு முறை ‘ராம்’ என்று எழுதுங்கள். அவ்வளவுதான்!
நீங்கள் எழுதும் ஒவ்வொரு ‘ராம்’ என்ற சொல்லும், பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களுக்கு உதவும் இந்தப் புதிய பாதையை உருவாக்குவதில் ஒரு சிறிய பங்களிப்பாக அமையும். இப்போதே இந்த டிஜிட்டல் இயக்கத்தில் பங்கேற்று, இந்த முயற்சிக்கு பங்களிப்பை வழங்கும்படி ஐடிசி மங்கள்தீப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வழிகாட்டிப் பாதையை உருவாக்கும் பணியின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன; இது பார்வைத்திறன் குறைபாடுள்ள பக்தர்களின் ஆன்மீகப் பயணத்திற்குத் துணையாக அமையும்.