வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி

வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று துவக்கி வைத்தார்.
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள் விநியோகிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி
Published on

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், பொது மக்களின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக 830 கோடி ரூபாய் செலவில், தயார் செய்யப்பட்ட 9 ஆயிரத்து 260 வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கு பென்ஷன், உள்ளிட்ட திட்டங்களை ஜெகன் மேகன் ரெட்டி, செயல்படுத்தி வருகிறார். அவர்கள் மூலமே இந்த திட்டத்தையும் முதல்வர் ஜெகன்மேகன் ரெட்டி, செயல்படுத்த திட்டமிட்டு அதனை துவக்கி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com