ஜே.இ.இ. மெயின் தேர்வு தள்ளிவைப்பு

ஜே.இ.இ. மெயின் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
ஜே.இ.இ. மெயின் தேர்வு தள்ளிவைப்பு
Published on

புதுடெல்லி,

என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. மெயின் முதல்கட்ட தேர்வு இம்மாதம் 21,24,25,29 மற்றும் மே 1, 4-ந் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது இத்தேர்வு வருகிற ஜூன் 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய டெஸ்டிங் ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல வருகிற மே 24 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த ஜே.இ.இ. மெயின் 2-ம் கட்டத் தேர்வு, வருகிற ஜூலை 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com