

புதுடெல்லி,
பாகிஸ்தானை இருப்பிடமாக கொண்ட பயங்கரவாத அமைப்பு ஜெய்ஷ்-இ-முகமது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புனித நகரமான அயோத்தி மீது தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமூக ஊடகத்தின் வாயிலாக அயோத்தியில் உள்ள ராம் ஜன்மபூமி கோவில் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது உளவுத்துறையால் இடைமறித்து கேட்கப்பட்டது. உடனடியாக அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் அயோத்தியில் பாதுகாப்பை அதிகரிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமதுடன் இணைக்கப்பட்ட நெட்வொர்க்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மே 1, 2019 அன்று ஐ.நா.பாதுகாப்பு அமைதிக் குழுவால் மசூத் அசார் உலகளாவிய பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.