ஜார்கண்ட்: இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் பலி

ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் இரண்டு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டத்தில் நேற்று இரவு மதுபன் காவல் நிலையப் பகுதியில் லட்காடோ வனப்பகுதிக்கு அருகே பைக் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு வந்த வாகனம் ஒன்று பைக் மீது மோதியது. பின்னர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தால் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பகோதர் காவல் நிலையப் பகுதி அருகே பைக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பைக் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த இரண்டு வெவ்வேறு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






